சூரியனை பற்றி விரிவாக ஆய்வு செய்ய, 'ஆதித்யா எல்1' என்ற விண்கலத்தை, பி.எஸ்.எல்.வி - சி 57 ரக ராக்கெட் உதவியுடன், இஸ்ரோ புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. ஆதித்யா எல்-1 விண்கலம் செயல்பாடு நன்றாகவும் சரியான பாதையிலும் சென்று கொண்டிருப்பதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. ஆதித்யா விண்கலத்தை ஹாலோ சுற்றுப்பாதை நோக்கி செலுத்துவதற்கான பணிகள் வெற்றிகரமாக முடிந்துள்ளது எனவும் ஹாலோ பாதைக்கு விண்கலத்தை மாற்றம் செய்வதற்கான பணிகள் அக்டோபர் 6ல் 16 விநாடிகள் வெற்றிகரமாக நடந்துள்ளதாகவும் இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.