தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கல்வி ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு பரிசு வழங்கி கெளரவித்த நிலையில் மூன்றாம் ஆண்டாக அதை தொடர்கிறார். இந்தாண்டு தவெக கல்வி விருது விழா மூன்று கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக கடந்த மே 30இல் நடைபெற்றது. இதையடுத்து இரண்டாம் கட்ட விழா நாளை (ஜூன். 04) நடைபெறுகிறது.