100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் முடங்கும் அபாயம்!

2379பார்த்தது
100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் முடங்கும் அபாயம்!
100 நாள் வேலை என பொதுமக்களால் பரவலாக அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமாகும். இந்த திட்டத்தின் பணியாளருக்கான ஊதிய விகிதத்தை மத்திய அமைச்சகம் தொழிலாளர்கள் ஊதிய சட்டம் பிரிவு 6 (c)-ன் கீழ் அவ்வப்போது நிர்ணயம் செய்து வருகிறது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்துக்கு ரூ.60,000 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தேவையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. 2022-23 நிதியாண்டில் ரூ.789,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டில் நிதி குறைப்பால், இத்திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி