தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதிவாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் சார்பில் இன்று பாராட்டு விழா நடக்கிறது. மாமல்லபுரத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த வரவேற்றார். இந்நிலையில் கல்வி விருது விழா நடைபெறும் அரங்கிற்கு விஜய் சற்றுமுன்னர் வருகை தந்துள்ளார்.