முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மகத்தான ஞானம், நேர்மையுடன் இந்தியாவை வழிநடத்தியவர். குறைவாக பேசினாலும், அதிகமாக செய்தார். இந்திய பொருளாதாரத்திற்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பு மற்றும் தேசத்திற்கு அவர் செய்த உன்னதமான சேவைகளால் என்றென்றும் போற்றப்படுவார்” என குறிப்பிட்டுள்ளார்.