திமுக அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்!

51பார்த்தது
திமுக அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்!
கிளாம்பாக்கத்தில் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்காமல் பொதுமக்களைக் கைக்குழந்தைகளோடு அலைக்கழித்து அவதிக்கு உள்ளாக்கும் திமுக அரசுக்கு வன்மையான கண்டனம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்றாலே மக்களின் கிளர்ச்சிப்பாக்கம் என்று விமர்சிக்கும் வகையில், பயணிகள் பேருந்துகள் வசதியின்றி கடும் அவதிக்கு உள்ளாவதே இன்னும் தொடர்கதையாகி வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி