தவெக-வின் முதல் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று (மார்ச். 28) நடைபெறுகிறது. கட்சியின் தலைவர் விஜய் என்ன பேச போகிறார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 137 செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் 1800 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். விஜய் 30 நிமிடங்கள் பொதுக்குழுவில் பேசுவார் என தகவல் வெளியாகியுள்ளது. அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் அனுமதிக்கப்படுகின்றனர்.