தவெக கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் சென்னை உரிமைகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட தங்கள் கட்சிக்கு மட்டுமே யானை சின்னம் இருக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த வழக்கை ஜூன் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி இன்று (ஏப். 29) உத்தரவு பிறப்பித்தார்.