குடியரசு தினத்தையொட்டி கிண்டி ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இதில் கலந்து கொள்ள ராஜ்பவன் சார்பில் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டு வந்த நிலையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஆளுநர் தேநீர் விருந்தில் அக்கட்சி பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.