பாமகவில் அன்புமணி தரப்புடன் விஜயின் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்புமணியுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி தவெகவின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி பேசி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. விசிகவுக்கு விரித்த வலை வேலை செய்யாததால் தவெக பாமக பக்கம் தாவி உள்ளதாக கூறப்படுகிறது. ஜான் ஆரோக்கியசாமி, 2016-ல் பாமகவிற்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்து பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.