பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 907 நாளாக போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக, தவெக தலைவர் விஜய், வரும் ஜன.19 அல்லது 20 தேதிகளில் களத்தில் இறங்கி போராடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை அருகே போராட்டத்திக்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தவெக பொதுச்செயலாளர் போராட்டம் நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.