தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த சஜி என்ற அந்தோணி சேவியர் காலமானார். இதற்கு வருத்தம் தெரிவித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்ட பதிவில், “என் மீதும் கழகத்தின் மீதும் அளவற்ற அன்பு கொண்டு கழகப் பணியாற்றி வந்தவர். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, சஜி உடலுக்கு அஞ்சலி செலுத்த விஜய் ஸ்ரீபெரும்புதூர் செல்வதாக கூறப்படுகிறது.