நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் திமுகவில் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளராக உள்ளார். இவர் தவெக தலைவர் விஜய் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், "தவெகவிற்கு ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்திக்காத தலைவர் இருக்கும் ஒரே கட்சி தவெக தான். மேலும் பெண்களை மதிக்காத தொண்டர்கள் தவெகவில் அதிகமாக உள்ளனர்" என கூறியுள்ளார். இவரின் இந்த கருத்திற்கு கண்டனம் எழுந்துள்ளது.