நாகை: தவெகவின் திருமருகல் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஜெகபர்தீன் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். ஜெகபர்தீன் தனது ஆதரவாளர்களுடன் திமுக மாவட்ட செயலாளர் கௌதமன் தலைமையில் திமுகவில் இணைந்தார். இதையடுத்து அவர், "தவெகவில் நலத்திட்டங்கள் வழங்குவதற்கு எங்களை சொந்தமாக செலவு செய்ய சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். சிறுபான்மை சமுதாய நிர்வாகிகளை புறக்கணிப்பதால் அக்கட்சியில் இருந்து விலகினேன்" என்று தெரிவித்துள்ளார்.