பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் போராட்டம் நடத்தும் நிலையில் அவர்களை தவெக தலைவர் விஜய் இன்று (ஜன. 20) சந்திக்கிறார். சற்றுமுன்னர் நீலாங்கரை இல்லத்தில் இருந்து அவர் பரந்தூருக்கு புறப்பட்டார். பொடாவூர் கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், போராட்டக் குழுவினரை அவர் சந்திக்க உள்ள நிலையில் இந்த நிகழ்வுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.