உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற கும்பமேளாவில் ருத்ராட்சருத்ராக்ஷ மாலை விற்பனை செய்து வந்த மோனலிசா என்ற இளம்பெண் சோஷியல் மீடியா மூலம் பிரபலமானார். பல ஆண்கள் செல்ஃபி எடுக்க அப்பெண்ணை சுற்றி சுற்றி வந்ததால் மோனலிசாவின் தந்தை அவரை சொந்த ஊரான பிரயாக்ராஜூக்கு திரும்பி அனுப்பினார். சொந்த ஊர் சென்றடைந்த மோனலிசா, தன் மீது காட்டிய அன்புக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.