திருக்காட்டுப்பள்ளியில்தண்டாயுதபாணி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு பால், தேன், திரவிய பொடி, பஞ்சாமிர்தம் என அனைத்து விதமான அபிஷேகப் பொருட்களும் சிறப்பு அபிஷேகம் நடந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறை அருள் பெற்றனர். ஏற்பாடுகளை செம்மேனி நாத குருக்கள் மேற்கொண்டு இருந்தார்.