மகாராஜபுரம் கிராமத்தில் கல்லணை பூம்புகார் சாலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது கடந்த 30 ஆண்டுக்கு மேலாக இருந்த இந்த பயணிகள் நிழற்குடை சாலை விரிவாக்க பணிகளால் இடிக்கப்பட்டது. கடந்த இரண்டாண்டுக்கு மேலாக நிழற்குடை இல்லாமல் வெயிலிலும் மழையிலும் பொதுமக்கள் நின்று பேருந்தில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து ஏற்கனவே இருந்த இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டி திருவிடைமருதூர் எம்எல்ஏவுக்கு கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று திருவிடைமருதூர் எம்எல்ஏவும் தமிழக அரசு தலைமை கொறடவுமான கோவி. செழியன் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க நிதிஒதுக்கி நடவடிக்கைகள் மேற்கொண்டார். இந்நிலையில் ஏற்கனவே இருந்த பயணிகள் பேருந்து நிலைய இடத்தினை இதே பகுதியைச் சேர்ந்த அரசு அலுவலர் ஒருவர் தனது மனைவி பெயருக்கு பட்டா மாறுதல் செய்துள்ளார் இதனை கண்டித்து அவரிடம் உள்ள அந்த இடத்தினை மீட்டு புதிய பயணிகள் நிழற்குடை அமைத்து தர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி கல்லணை பூம்புகார் சாலையை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கல்லணை பூம்புகார்சாலையில்போக்குவரத்து பாதிப்புஏற்பட்டது. விரைந்து வந்தபந்தநல்லூர் போலீசார் போராட்டத்தில்ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.