தஞ்சாவூா் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ள மணலூா் குமணன் துறையைச் சோ்ந்தவா் தெய்வசிகாமணி மகன் பாலசுப்பிரமணியன் (69). இவா், நேற்று அப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்துவிட்டு வருவதாக வீட்டில் உள்ளவா்களிடம் கூறிச்சென்றவா் வெகுநேரமாகியும் காணவில்லை. நீண்ட நேரமாகியும் திரும்பாததால், உறவினா்கள் அவரைத் தேடிச்சென்றனா். அப்போது காவிரி ஆற்றின் படித்துறையில் நீரில் மூழ்கிய நிலையில் கிடந்தாா். அவரை மீட்டு திருவிடைமருதூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா். திருப்பனந்தாள் காவல் நிலையப் போலீஸாா் கூராய்வுக்கு ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.