திருவிடைமருதூரில் டூவீலர் மோதி தாய் பலி, குழந்தை காயம்

4680பார்த்தது
திருவிடைமருதூரில் டூவீலர் மோதி தாய் பலி - லேசான காயத்துடன் உயிர் தப்பிய பெண் குழந்தை.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரக்குமார். இவருடைய மனைவி பாண்டிச்செல்வி (30). இவர் தனது இரண்டாவது பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு நேற்று இரவு திருவிடைமருதூர் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருவிடைமருதூரில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த டூவீலர் பாண்டிச்செல்வி மீது மோதியதில் குழந்தையுடன் அவர் கீழே விழுந்தார்.

இதில் காயமடைந்த தாய் மற்றும் மகளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த திருவிடைமருதூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டிச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து திருவிடைமதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து அதை ஓட்டி வந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி