கல்லணை இன்று காலை நிலவரப்படி கொள்ளிடத்தில் மட்டும் 45 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. அது போல மேட்டூரில் 107. 69 அடியாகவும், 75. 167 தண்ணீர் இருப்பாவும் உள்ளது. அணைக்கு 1, 34, 115 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து 1002 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூருக்கு அதிகப்படியாக தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி கொண்டுள்ளனர்.