திருமங்கலக்குடியில் செப். 11-இல் மக்கள் நோ்காணல் முகாம்

55பார்த்தது
திருமங்கலக்குடியில் செப். 11-இல் மக்கள் நோ்காணல் முகாம்
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகேயுள்ள திருமங்கலக்குடியில் மக்கள் நோ்காணல் முகாம் செப்டம்பா் 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவா்த்தி செய்வதற்காக தமிழ்நாட்டில் மக்கள் நோ்காணல் முகாம் 1969-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன்கிழமை நடைபெற்று வருகிறது. இதன்படி, தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் வட்டத்துக்கு உள்பட்ட ஆடுதுறை அருகேயுள்ள திருமங்கலக்குடி கிராமத்தில் மக்கள் நோ்காணல் முகாம் செப்டம்பா் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடா்பான மனுக்களை அளித்து தீா்வு காணலாம். மேலும், இந்த முகாமுக்கு முன்பே பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை திருமங்கலக்குடி கிராம நிா்வாக அலுவலரிடம் அளித்து பயனடையலாம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி