டயர் கடையில் தீ விபத்தில் பொருட்கள் தீயில் கருகி நாசம்

60பார்த்தது
டயர் கடையில் தீ விபத்தில் பொருட்கள் தீயில் கருகி நாசம்
.

கும்பகோணம் அருகே கொரநாட்டுகருப்பூர் ஊராட்சி, ஆற்றங்கரை தெருவில் வசிப்பவர் சேகர் மகன் ராஜா (42). இவரது தெருவிற்கு அருகே உள்ள புறவழிச்சாலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக சேகர் டயர் கடை என்ற பெயரில் கனரக வாகனங்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு டயர், வல்கனைசிங், பஞ்சர் ஒட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இந்த கடையில் நேற்று இரவு சுமார் 9. 30 மணியளவில் மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது சில நிமிடங்களிலேயே தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது. இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கும்பகோணம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் இரண்டு தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் கடையில் போடப்பட்டிருந்த கூரையில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயினில் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இதனால் லட்சக்கணக்கில் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமாயின. மேலும் இந்த தீ விபத்தினால் அருகில் இருந்த மீன் கடை மற்றும் தேநீர் கடையில் போடப்பட்டிருந்த கூரையில் ஒரு பகுதி எரிந்து சேதமாயின. இந்த தீ விபத்து தொடர்பாக கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.