திருவிடைமருதூர் ஸ்ரீ கிருஷ்ணா ஹாலில் 50 ஆண்டு கால அரசியல் அதிசயம் தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் புகைப்பட கண்காட்சி அரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் டாக்டர் கலைஞர் புகைப்பட அரங்கத்தை திறந்து வைத்தார்கள். மற்றும் இவ்விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க அன்பழகன் அவர்கள் முன்னாள் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் செ. இராமலிங்கம் ஒன்றிய செயலாளர்கள் சுந்தர ஜெயபால் , கோ. க. அண்ணாதுரை கலந்துகொண்டு சிறப்பித்தனர். மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்துகொண்டனர்.