பசுபதிகோயில் புனித அந்தோணியார் திருத்தலத்தில் கொடியேற்றம்,

52பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா,   பசுபதிகோயில் புனித அந்தோணியார் திருத்தலம் திருவிழா கொடியேற்றம், மற்றும் புதுப்பிக்கப்பட்ட பள்ளி கட்டிடம் திறப்புவிழா புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளி தாளாளர், பங்கு தந்தை ராஜசேகர் முன்னிலையில் நடைபெற்றது 
குடந்தை மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம், கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார். பின்னர் புனித அந்தோணியார் திருத்தலத்தில் புதியதாக அமைக்கப்பட்ட கொடிமரத்திற்கு பூசை வழிபாடுகள்  செய்து புனிதப்படுத்தினார் தொடர்ந்து  கொடியேற்றம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து  புனித அந்தோணியார்  திருத்தலத்தில்  சிறப்பு திருப்பலி பூசைகள் நடைப்பெற்றன. இந்நிகழ்வில் மறை மாவட்ட பள்ளி செயலாளர் அருட் பணியாளர் கஸ்பார். பாபநாசம் பங்கு தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ், காணியிருப்பு பங்கு தந்தை ஜோசப் அடிகளார் மற்றும் அருட் சகோதர, சகோதரிகள்,  மற்றும்  ஆசிரியர்கள்,   பெற்றோர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், அய்யம்பேட்டை பங்கு கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி