திருவிடைமருதூரில் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் மட்டை மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தனது சொந்த நிதியில் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை ஊக்குப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கிரிக்கெட் மட்டை, பந்து மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். ஒவ்வொரு பகுதிக்கும் 5 பேர் கொண்ட குழுவுக்கு ஒரு கிரிக்கெட் மட்டை மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை முன்னாள் எம்பி ராமலிங்கம், திருவிடைமருதூர் பேரூராட்சி துணை பெருந்தலைவர் மயில்வாகனன், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.