பாபநாசத்தில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வு

78பார்த்தது
உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் மரக்கன்றுகள்  மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி சங்கத் தலைவர் தேவராஜன் தலைமையில் நடைபெற்றது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பாபநாசம் கிளை மேலாளர் ஆர். கிரிதரன் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.  
சங்கச் செயலாளர் தங்க. கண்ணதாசன், பாபநாசம் தலைமை அஞ்சலக அதிகாரி சுமதி ஆகியோர்கள் பொதுமக்களிடத்தில் மக்கள் தொகை பெருக்கத்தாலும்,   தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் பெருகி உள்ளதால் இதன் கழிவுகள் காற்று மண்டலத்திலும், நிலத்திலும், ஆறு, கடல்களிலும் கலந்து சுற்றுச்சூழலை மாசடைய செய்துள்ளது பற்றியும்,
இதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், நாம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு செயல்படுத்த வேண்டிய முறைகள் பற்றி எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில்
நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார், களப்பணியாளர் புனிதவல்லி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி