மின் கோட்டத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

52பார்த்தது
மின் கோட்டத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
கும்பகோணம் மின் கோட்டத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் கோட்ட அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மேற்பார்வை பொறியாளர் மு. நளினி தலைமையில் ஜூலை 11 வியாழக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தில் கும்பகோணம் நகரம், கும்பகோணம் புறநகர், பாபநாசம் நகர், பாபநாசம் புறநகர், கபிஸ்தலம், அய்யம்பேட்டை நகர், அய்யம்பேட்டை புறநகர், திருக்கருக்காவூர், கணபதிஅக்ரஹாரம் , பட்டீஸ்வரம், சுவாமிமலை, திருப்புறம்பியம் பிரிவு அலுவலகம் பகுதியினைச் சார்ந்த மின் நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து தெரிவிக்கலாம் என செயற்பொறியாளர் ஜெ. திருவேங்கடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி