ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சி பகுதிகளில், 7 சாலைகள் மேம்பாடு செய்திட, திட்டப்பணிகளில் நிதி ஒதுக்கீடு செய்ய ரூ. 199. 35 லட்சம் மதிப்பீட்டிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதில் தற்போது 2024 - 25 சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ஒரு சாலை மேம்பாட்டிற்காக மட்டும் ரூ. 9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஆடுதுறை பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
இது குறித்து ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின் கூறுகையில்,
தஞ்சை மாவட்டத்தில் உள்ள தேர்வுநிலை பேரூராட்சிகளான, ஒரத்தநாடு, அம்மாபேட்டை பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தலா ரூ. ஒரு கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல் நிலை பேரூராட்சியான திருபுவனம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் மற்றும் மெலட்டூர் பேரூராட்சிகளுக்கு ரூ. 40 லட்சத்திற்கு மேல் ஒரு கோடி வரை நிதி செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் நிலை பேரூராட்சியான வேப்பத்தூர் பேரூராட்சிக்கு ரூ. 87 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வுநிலை பேரூராட்சியான, ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சிக்கு மட்டும், இரண்டாம் நிலை பேரூராட்சியினை விட குறைவாக, ரூ. 9 லட்சம் மட்டுமே நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பேரூராட்சியின் திட்டப்பணிகளில் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டதில் பாரபட்சம் இருப்பது தெரியவருகிறது.