மலேசியாவில் இறந்த தொழிலாளியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவிடைமருதூர் அருகே உள்ள திருபுவனம் முதலியார் குல தெருவை சேர்ந்தவர் ராஜன் (51). ஓட்டல் தொழிலாளியான இவர் கடந்த செப்டம்பர் 30ம்தேதி மலேசியாவிற்கு
வேலை தேடி சென்றுள்ளார். அங்கு கடந்த 1ம்தேதி மதியம் நெஞ்சுவலி ஏற்பட்டு ராஜன் இறந்து விட்டதாக அங்குள்ள உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ராஜன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர தேவையான சான்றிதழ்களை தயார் செய்தனர். ராஜன் உடலை சொந்த ஊரான திருபுவனத்திற்கு கொண்டு வருவதற்கு ராமலிங்கம் எம்பி, மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதினார். பின்னர் குடும்பத்தினர் மாவட்ட கலெக்டரிடம் நேரில் சென்று மனு அளித்தனர். அவரது உடலை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை அளித்துள்ளனர்.