உறவு பெண் ஆபாசபடம்; நபரை மிரட்டி பணம் மோசடி

7394பார்த்தது
உறவு பெண் ஆபாசபடம்; நபரை மிரட்டி பணம் மோசடி
ஒரத்தநாட்டை சேர்ந்த 49 வயதான நபரிடம் அவரின் உறவு பெண்ணின் ஆபாச படம் உள்ளதாகவும் அதனை இணையதளத்தில் வெளியிடுவதாகவும் மிரட்டி பணம் பறித்த மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் 49 வயதான விவசாயி இவருடைய செல்போன் எண்ணுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது.

அப்போது அவரிடம் பேசிய நபர் உங்களுடைய நெருங்கிய உறவு பெண் என்னுடன் தொடர்பில் இருந்தார். அவருடைய ஆபாச படம் என்னிடம் உள்ளது. அதனை இணையத்தில் வெளியிடுவேன். அவ்வாறு வெளியிடாமல் இருக்க பணம் தர வேண்டும் என மிரட்டியுள்ளார். இதில் பயந்து போன அந்த விவசாயி ரூபாய் 7000 ஐ ஆன்லைன் மூலம் அனுப்பி உள்ளார். தொடர்ந்து அந்த நபரிடம் ஆபாச வீடியோ, புகைப்படத்தை அழிப்பது தொடர்பாக கேட்டபோது அந்த நபர் செல்போனை ஆப் செய்து விட்டு அவரிடம் தொடர்பு கொள்ள மறுத்துவிட்டார்.

இதை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த விவசாயி தஞ்சாவூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ராமதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். உறவு பெண்ணின் ஆபாச புகைப்படம் இருப்பதாக கூறி விவசாயியை ஏமாற்றிய மர்ம நபர் இதுபோல் பலரையும் ஏமாற்றி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி