திருக்காட்டுப்பள்ளி: மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

59பார்த்தது
திருக்காட்டுப்பள்ளி: மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
திருக்காட்டுப்பள்ளி அருகே கோவில்பத்து தெற்குதெருவைச் சேர்ந்தவர் அன்பு. இவருடைய மகன் அசோக்குமார் (வயது 22) ஐடிஐ படித்து விட்டு சமையல் உதவியாளராக வேலை செய்து வந்தார். பூதலூர் பழைய பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் அருகில் ஒரு நிகழ்ச்சிக்கு சமையல் வேலைக்கு அசோக்குமார் சென்றார். நேற்று அதிகாலை அங்கு வீட்டின் படியில் இருந்த ஸ்டீல் பைப்பை தொட்டபோது அதில் மின்சாரம் தாக்கியதில் மயங்கி அசோக்குமார் விழுந்துள்ளார். 

இதனால் அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அசோக்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி