திருக்காட்டுப்பள்ளி: மது பாட்டில்கள் பதுக்கிய பெண் கைது

1078பார்த்தது
திருக்காட்டுப்பள்ளி: மது பாட்டில்கள் பதுக்கிய பெண் கைது
திருக்காட்டுப்பள்ளி அருகே விற்பனைக்காக மது பாட்டில்களை வைத்திருந்த பெண் கைது செய்யப்பட்டார்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது காமராஜர் காலனியில் மல்லிகா என்பவர் விற்பனைக்காக 47 மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி