திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருச்செனம்பூண்டி சேர்ந்த அஜித்குமார். இவரது மனைவி கண்மணி (25). இவருக்கும் முன் விரோதம் காரணமாக அதே தெருவை சேர்ந்த செந்தில்நாதன், அவரது மனைவி கீர்த்தி, வானராங்குடியை சேர்ந்த ரவி (60) ஆகிய 3 பேரும் சேர்ந்து திட்டினர். மேலும் செந்தில்நாதன் அரிவாளால் கண்மணியை வெட்டி தாலிசங்கிலியை அறுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த கண்மணி அரசு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கண்மணி தோகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் ரவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்