திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவில் குளம் தூர்வாரப்படுமா?

80பார்த்தது
திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவில் குளம் தூர்வாரப்படுமா?
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் திருப்பாலைத் துறை தவளவெண்ணகை உடனுறை பாலைவனநாதர் திருக்கோவில் குளம் தூர்வாரப்படவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பாலைத்துறை பாலைவனநாதர் தவளவெண்ணகையால் சமேத பாலைவனநாதர் கோவில் பாடல் பெற்ற தலமாகும். திருநாவுக்கரசர் பாலைவனநாதரை பற்றி 11 தேவார பாடல்களை பாடியுள்ளார். தேவார பாடலில் இது 19-வது திருத்தல மாகும்.
சிறப்பு வாய்ந்த திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவில் குளம் செடி, கொடிகள், புதர்போல் மண்டி கிடக்கிறது. குளத்தை சுற்றிலும் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு உள்ளது. எனவே, சம்பந்தபட்ட துறையினர் திருக்கோவில் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி செடி, கொடிகள் மண்டிகிடப்பதையும் முழுமையாக தூர்வார வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி