முருக பக்தர்கள் மாநாட்டினை முன்னிட்டு திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியத்தில் பாஜக ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 10) நடைபெற்றது.
மதுரையில் இந்து முன்னணி சார்பில் ஜூன் 22 அன்று மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்கவுள்ள நிலையில், தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியத்தில் இன்று மாலை தனியார் திருமண மண்டபத்தில் மாநாட்டிற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் தங்கம் கென்னடி தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் ஏ. வேத செல்வம் முன்னிலை வகித்தார். மேலும் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் உள்ள பாஜக மூத்த நிர்வாகிகள் மாநாட்டில் கலந்து கொள்வதை முன்னிட்டு சில முக்கிய முடிவுகள் மற்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் மார்க்கெட் செல்வராஜ், மாவட்ட பொறுப்பாளர் அண்ணாமலை, முன்னாள் தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் சாக்கோட்டை சதீஷ்குமார், சாமுவேல் உட்பட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட மாநகர ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.