திருவையாறு ஒன்றியக்குழு கூட்டம்

271பார்த்தது
திருவையாறு ஒன்றியக்குழு கூட்டம்
ஒன்றிய குழுத்தலைவர் அரசாபகரன் தலைமையில் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது, ஆணையர்கள் ஜான்கென்னடி, காந்திமதி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர் அய்யாசாமி: அல்லூர் ஊராட்சி அரசக்குடி ஆதிதிராவிடர் தெரு பழுதடைந்த சாலையை புதிதாக அமைத்துதர வேண்டும் என்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்கென்னடி: அந்த சாலை பணிகள் 2023 - 2024 திட்டத்தின் கீழ் பணி மேற்கொள்ள வேண்டி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒன்றிய குழு தலைவர் அரசாபகரன்: ஒன்றிய பொது நிதிநிலைமைக்கு ஏற்ப அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்ளுக்கும் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். கவுன்சிலர் ஜெயசீலன்: கீழ திருப்பந்துருத்தி ஊராட்சி காட்டுக்கோட்டையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்துள்ளது புதிதாக கட்டித்தர வேண்டும் என்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்கென்னடி: 15 வது ஊதியக்குழு மான்ய திட்டத்தில் அப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பாஸ்கர்: காருகுடி, ராயம்பேட்டை, திருப்பழனம் பகுதிகளில் பழுதடைந்த நியாயவிலை கடைகள் சீரமைக்க வேண்டும், ராயம்பேட்டை வடக்கு தெரு, பால்வாடி பகுதிகளில் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றி தர வேண்டும். முகம்மது இக்பால்: முகாசா கல்யாணபுரத்தில் பழுதடைந்த அங்கன்வாடியை அகற்றி புதிதாக அமைத்துதர வேண்டும் இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி