திருவையாறு அருகே மான் வந்ததால் பரபரப்பு

80பார்த்தது
திருவையாறு அருகே மான் வந்ததால் பரபரப்பு
திருவையாறு அருகே திருப்பழனம் ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே தனியாருக்கு சொந்தமான காம்பவுன்டில் மான் மேய்ந்து கொண்டிருப்பதை பார்த்த பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஊராட்சி தலைவர் ஜெயசுதா பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்தனர் இதையடுத்து ஊராட்சிதலைவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலறிந்த தஞ்சை வனச்சரக அலுவலர ரஞ்சித் அறிவுறுத்தலின்படி திருவையாறு வனத்துறை பாரஸ்டர் திருஞானசம்பந்தம் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டு தொடர்ந்து அதனை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் கொண்டு சென்றுவிடும் பணி மேற்கொண்டனர். இந்த பகுதிக்கு வந்த மான் கொள்ளிட கரை, அரியலூர், பெரம்பலூர் பகுதியில் காடுகளிலுள்ள  மான் கோடை வெயிலின் காரணமாக தண்ணீர் , இரை தேடி திருப்பழனம் பகுதிக்கு வந்து இருக்கலாம் என்று வனத்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி