திருக்காட்டுப்பள்ளி: பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி

52பார்த்தது
திருக்காட்டுப்பள்ளி: பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி
திருக்காட்டுப்பள்ளி அருகே அகரப்பேட்டையில் உள்ள ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் 2025-26ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பேரணி நேற்று பள்ளி வளாகத்தில் தொடங்கி, மெயின் ரோடு, மணல் மேட்டுத் தெரு மற்றும் முக்கிய வீதிகளில் சென்று பள்ளியை வந்தடைந்தது. நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை (பொ) நித்திலா, ஆசிரியர்கள் ஜோஸ்பின் மேரி, சுப்ரமணியன் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி