தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகாவில் முன்பட்ட குறுவை பயிரில் பூச்சி தாக்குதல் காரணமாக மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தஞ்சை அருகே பூதலூர் தாலுகா பகுதியில் உள்ள பல கிராமங்களில் ஆழ்துளை கிணறு நீரை கொண்டு முன்பட்ட குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடவு செய்யப்பட்ட பயிர்கள் கோடையில் பெய்த மழை காரணமாக செழித்து வளர்ந்து வருகின்றன. பயிர் செய்யப்பட்ட குறுவை நெல் வயல்களில் விவசாயிகள் களை எடுத்து மேல் உரமிடும் பணிகளை செய்து வருகின்றனர். ஒருசில வயல்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவைப்பயிர்களில் பூச்சி தாக்குதல் தென்பட்டுள்ளதால், விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்தை ஸ்பிரேயர் மூலம் பயிர்களின் மீது தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அக்னிநட்சத்திரம் நிறைவடைந்த நிலையிலும் கடந்த சில நாட்களாக பூதலூர் தாலுகா பகுதிகளில் அக்னி நட்சத்திர வெயில் போல அடித்து வருகிறது. இதனால் அதிக நேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய சூழ்நிலையில் விவசாயிகள் உள்ளனர். பயிர்களில் பூச்சி தாக்குதல் காரணமாக மகசூல் குறையவும் வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கவலையில் உள்ளனர்.