வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலவிடையல் ஊராட்சி, ஆண்டாங்கோயில் ஊராட்சி துவக்கப் பள்ளியில் 2024-25ஆம் ஆண்டிற்கான 100 நாள் வேலை தொடர்பான சமூக தணிக்கை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிராம சபை கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி சிவகுமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் முருகையன், ஊராட்சி செயலாளர் சதீஷ்குமார் மற்றும் 100 நாள் பணியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.