மருத்துவமனை இடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை.

658பார்த்தது
மருத்துவமனை இடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை.
திருக்காட்டுப்பள்ளி சன்னதி தெருவில் அரசு மருத்துவமனைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் தங்க குடியிருப்பு கட்டிடம் இருந்தது. இரவு நேரங்களில் மருத்துவர்கள் தங்கி மருத்துவம் பார்த்தும் வந்தனர். அந்த கட்டிடம் பழுதடைந்தால் அதை இடித்து அப்புறபடுத்திவிட்டு கம்பிவேலிகளை கொண்டு அடைத்து "இந்த இடம் அரசு மருத்துவமனைக்கு சொந்தமான இடம். யாரும் பிரவேசிக்கக்கூடாது" என அறிவிப்பு பதாகை வைத்திருந்தனர். தற்போது அந்த இடத்தில் இருந்த அறிவிப்பு பதாகை, கம்பிவேலிகளை அகற்றிவிட்டு தனிநபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அந்த இடம் மதுபிரியர்கள் புகலிடமாக மாறி விட்டது. அரசு மருத்துவமனையில் ஸ்கேன், எக்ஸ்ரே, கண் மருத்துவம் பார்க்க மருத்துவர்கள் இல்லை. இரவு நேரங்களில் வரும் நோயாளிகளை பார்க்க மருத்துவர்கள் இல்லை. மருத்துவர்கள் அனைவரும் வெளியூரிலிருந்து வருகின்றனர். இங்கு மருத்துவர்கள் தங்குவதற்கு குடியிருப்பு கட்டடம் கட்டிக்கொடுத்தும், ஸ்கேன், எக்ஸ்ரே, கண் மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகள் ஏற்படுத்தியும் இப்பகுதி மக்களுக்கு மருத்துவ சேவைகள் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி