தஞ்சாவூரில் நாளை மின் நிறுத்தம்

6471பார்த்தது
தஞ்சாவூரில் நாளை மின் நிறுத்தம்
தஞ்சாவூரில் அக்டோபர் 10ஆம் தேதி(நாளை) மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து உதவி செயற்பொறியாளர் கருப்பையா விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் அக். 10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் மின்வினியோகம் பெறும் அருளானந்த நகர், பிலோமினா நகர், காத்தூன் நகர், சிட்கோ, அண்ணா நகர், காமராஜர் நகர், பாத்திமா நகர், அன்பு நகர், திருச்சி சாலை, வ. உ. சி நகர், பூக்கார தெரு, 20 கண் பாலம், கோரிக்குளம், கணபதி நகர், ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜே. ஜே. நகர், திரிபுர சுந்தரி நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர், செயற்பொறியாளர் அலுவலகம், கலெக்டர் பங்களா சாலை, டேனியல் தாமஸ் நகர், ராஜராஜேஸ்வரி நகர், காவேரி நகர், நிர்மலா நகர், சுபாஷ் சந்திரபோஸ் நகர், தென்றல் நகர், துளசியாபுரம், தேவ நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கூட்டுறவு காலனி, நடராஜபுரம் காலனி, தெற்கு புதிய ஹவுசிங் யூனிட், முல்லை, மருதம், நெய்தல், நட்சத்திர நகர், வி. பி. கார்டன், ஆர். ஆர் நகர், சேரன் நகர், யாகப்பா நகர், அருளானந்த அம்மாள் நகர், குழந்தை இயேசு கோவில் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என கூறப்பட்டுள்ளது. வீரமரசன்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் 10ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பூதலூர், செல்லப்பன்பேட்டை , மருதகுடி, புதுப்பட்டி , ஆவாரம்பட்டி, முத்துவீர கண்டியன்பட்டி, வெண்டையம்பட்டி, நந்தவனப்பட்டி, அயனாவரம், இந்தளூர், சோழகம்பட்டி , ஒரத்தூர், பூதராயநல்லூர், சாமிநாதபுரம், சிவசாமிபுரம், மோசஸ்புரம், விண்ணமங்கலம், அடஞ்சூர், மாதுரான்புதுக்கோட்டை, முல்லைக்குடி, தீட்சி சமுத்திரம், தொண்டராயன்பாடி, ஆற்காடு, சித்திரக்குடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது என்று தஞ்சாவூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் இளஞ்செல்வன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி