தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பழமார்நேரியில் வீட்டுவாசலில் நிறுத்தியிருந்த சரக்கு வாகனத்தைக் காணவில்லை என செவ்வாய்க்கிழமை இரவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பழமார்நேரி பிரதான சாலையைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் முருகானந்தம் (46). இவரது டாடா ஏஸ் சரக்கு வாகனத்தைக் கடந்த 18-ஆம் தேதி வீட்டுவாசலில் நிறுத்திவிட்டு உறங்கச்சென்றார். காலையில் வாகனத்தை காணவில்லையாம்.
அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸில் முருகானந்தம் புகார் அளித்தார். புகாரை ஏற்று காவல் துறை சார்பு ஆய்வாளர் ராஜ் மோகன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்