திருவையாறு அருகே திருவேதிக்குடி ஆலங்குடியில் குடந்தை மறைமாவட்டம் சார்பில் புனித செபஸ்தியார் சர்ச் திறப்பு விழா நடந்தது. கும்பகோணம் மறைமாவட்ட மிஷன் இயக்குனர் செல்வராஜ் வரவேற்றார். புதிதாக கட்டப்பட்டுள்ள புனித செபஸ்தியார் சர்ச்சை ஆயர் ஜீவா னந்தம் அமலநாதன் அருள்பொழிவு செய்தார். தொடர்ந்து கனடா ஆயர் வெயின் லாப்சிங்கர் திறந்து வைத்தார். கட்டட பாராட்டிகள் கௌரவிக்கப்பட்டனர். கலைஞர்கள் தொடர்ந்து கிராம சிறுமியர், இளையோர் நடனமும் இரவு சிறப்பு தேர்ப்பவணியும் நடந்தது. ஏற்பாடுகளை ஆலங்குடி கிராம காரியஸ்தர்கள், இளையோர் மற்றும் இறை சமூகத்தினர் செய்திருந்தனர்.