தஞ்சை: வெள்ளி தேர் திருப்பணிக்கு வெள்ளிக்கட்டி வழங்கிய அமைச்சர்

51பார்த்தது
தஞ்சை: வெள்ளி தேர் திருப்பணிக்கு வெள்ளிக்கட்டி வழங்கிய அமைச்சர்
தமிழக இந்து அறநிலையத்தபிரசித்திப் பெற்ற திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை முல்லைவனநாதர் சுவாமி திருக்கோவில் வெள்ளி தேர் திருப்பணிக்கு திருக்கோவில் இருப்பில் உள்ள ரூ. 3 கோடி மதிப்பில் 408 கிலோ 145 கிராம் வெள்ளி கட்டிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். 

மேலும் தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டத்தின்படி ரூ. 97 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார். விழாவில் சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், தஞ்சாவூர் இணை ஆணையர் ஜோதிலட்சுமி, தஞ்சாவூர் துணை ஆணையர் சுரேஷ், திருவாரூர் உதவி ஆணையர் சொரிமுத்து, தஞ்சாவூர் உதவி ஆணையர் ஹம்சன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருக்கோவில் செயல் அலுவலர் விக்னேஷ் செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி