சுவாமிமலையில் மாசி மாத பௌர்ணமி கிரிவலம்

68பார்த்தது
சுவாமிமலையில் மாசி மாத பௌர்ணமி கிரிவலம்
சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு டிரஸ்ட் சார்பில் மாசி மாத பௌர்ணமி கிரிவலம் வல்லப கணபதி சன்னதியில் இருந்து துவங்கியது. கபிஸ்தலம் சந்திரசேகர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பேராசிரியர் முனைவர் பாலகிருஷ்ணன், திருவைகாவூர் மு. ஊ. ம. த முருகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கிரிவலத்தில் சிவத்திரு. திருவருட்செம்மல் இறைநெறி இமயவன் வழிகாட்டுதலுடன் கூட்டு வழிபாடு மற்றும் கிரிவலம் நடைபெற்றது. சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு நிறுவனர் கேசவராஜன், நிர்வாக அறங்காவலர் சிவசங்கரன், செயலாளர் சேகர், பொருளாளர் சுவாமிநாதன், அறங்காவலர்கள் மாணிக்கம், சண்முகம், நெடுஞ்செழியன், ஆலோசகர் நடராஜன், கலைச்செல்வன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். கிரிவலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பாரத் கல்லூரி தாளாளர் புனிதா கணேசன், கபிஸ்தலம் சந்திரசேகர் குடும்பத்தின் சார்பில் அமுது வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி