திருவையாறு அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது
திருவையாறு செவ்வாய்கிழமை படித்துறை தெருவை சேர்ந்த கணேசன் மகன் கார்த்திக்(35) இவர் திருவையாறு அம்மன் கோவில் ஆர்ச் அருகே அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரியை சட்ட விரோதமாக விற்று வருவதாக வந்த தகவலின்பேரில் திருவையாறு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் வேலாயுதம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக்கை பிடித்து அவரிடம் இருந்த 12 லாட்டரி சீட்டுகள் ரூ. 250 ஆகியவற்றை பறிமுதல் செய்து திருவையாறு காவல்நிலையத்திற்கு கொண்டுவந்து வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.