தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா புள்ள பூதங்குடி நரசிம்மபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சீனிவாசன்இவர் கட்டிட
வேலை பார்த்து வருகிறார்
இவரது மகன் மஹிஸ்னா வயது 15 இவர் புள்ள பூதங்குடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பு படித்து வந்தார் இன்று பத்தாம் வகுப்புக்கான தேர்வு
முடிவுகள் வெளியானது இதில் தமிழ் பாடத்தில் 95 மதிப்பெண்களும், ஆங்கில பாடத்தில் 97 மதிப்பெண்களும், கணித பாடத்தில் 100 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும், சமூக அறிவியல் பாடத்தில் 99மதிப்பெண்களும் ஆக மொத்தம் 491 மதிப்பெண்களை பெற்று மாணவன் சாதனை படைத்துள்ளார்
இது குறித்து மாணவன் மஹிஸ்னா கூறுகையில் நான் மேல் படிப்பு படித்து மருத்துவராக வேண்டும். இலவசமாக ஏழை எளிய கிராமப்புற மக்களுக்கு சிகிச்சை அளிக்கவேண்டும் அரசு உதவி செய்தால் மேலும் படித்து சாதனை படைப்பேன் என தெரிவித்துள்ளார்
மேலும் வெற்றி பெற்ற மாணவனை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் இனிப்புவழங்கி பாராட்டினர்