கல்யாணபுரம் கோவில் தேரோட்டம்

66பார்த்தது
கல்யாணபுரம் கோவில் தேரோட்டம்
திருவையாறு அருகே கல்யாணபுரம் அருள்மிகு விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் கோவில் பிரம்மோத்ஸவ விழா தோராட்டம் நடைபெற்றது. திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்தனர்.

திருவையாறு அருகே கல்யாணபுரம் அருள்மிகு விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் ஸ்வாமி கோவில் மூன்றாம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. காலை காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார் தொடர்ந்து தீபாராதனைகள் நடைபெற்றது. பாஜக மூத்த உறுப்பினர் ராதிகாகேசவன் கொடியசைத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். திருந்தேர் நான்கு வீதிகள் வலம் வந்து கோவில் சன்னதியை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார் கண்ணன் அபிஷேக ஆராதனைகளை செய்தார்.
விழாவில் ஆசிரியர் கிருஷ்ணன், ஒய்வுபெற்ற தலைமையாசிரியர் சீனிவாசன், பாம்பிசீனிவாசன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் கண்ணன், ஸ்ரீ நீவாஸாசாரி, ஸ்ரீ தரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you